
பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி தேவஸ்தான தைப்பூசத்தில் இரத ஊர்வலம் மற்றும் பால் குடத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முஹமட் சாதிக்குடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்தார். இந்நிலையில், காவடி ஊர்வலம், முடி காணிக்கை, இதர காணிக்கைகள், தேங்காய் உடைப்பு, தண்ணீர் பந்தல், இலவச உணவு வழங்குதல் மற்றும் வியாபார தளங்களுக்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத் தலைவருமான டாக்டர் இராமசாமி கூறியிருக்கிறார்.
