26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பாகிஸ்தானில் கடும் பனி பொழிவு குளிரினால் இறப்போர் அதிகரிப்பு!

🔥 Views : 7
👁 Reading Now : 66

பாகிஸ்தானில் நிலவும் கடும் பனிபொழிவு காரணமாக சாலைகளில் நிலைகுத்தி நின்ற வாகனங்களுள் அகப்பட்டு அதிகமானவர்கள் இறந்துள்ளனர். அங்கு வீசிய பனிப்புயலினால் ஆயிரக் கணக்கான வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். தலைநகர் இஸ்லமாபாத்திற்கு வடக்கே அமைந்துள்ள மலை நகரமான முர்ரேவில் வழக்கத்திற்கு மாறாக நிலவும் கடுமையான பனிப்பொழிவைக் காண கடந்த சில நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வானங்கள் அந்தப் பகுதிக்குள் நுழைந்தன. இதனால், நகருக்குள்ளும் வெளியிலும் சாலைகளில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்களுக்குள் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles