24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தலைநகரில் நிலச்சரிவு பாதுகாப்பு-முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

🔥 Views : 8
👁 Reading Now : 51

கோலாலம்பூர் பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக அச்சமடைந்துள்ள மக்கள் மேலும் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க கோலாலம்பூர் மாநகர் மன்றம் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தலைநகரில் அடிக்கடி கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. அண்மைய நிலச்சரிவினால் கோலாலம்பூர், பங்சார் பார்க், லோரோங் லீமாவ் மானிஸ் 2-இல் ஒரு வீடு பாதிக்கப்பட்டுள்ளதாக ‘செலமாட்கான் கோலாலம்பூர்’ அமைப்பின் தலைவர் டத்தோ எம். அலி தெரிவித்துள்ளார். வடிகால் முறை சீராக இல்லாததாலும் மேடான பகுதிகளுக்கான தடுப்புச் சுவர் சரியாக பர்ரமரிக்கப்படாததாலும் இதற்கு முன்பும் நிலச்சரிகள் ஏற்பட்ட நிலையில் இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் பயத்துடன் இருப்பதாக அலி மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles