24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பழைய அத்தியாயத்தைப் புதுப்பிக்கும் இலங்கை: சீனாவிடம் இருந்து விலகி இந்தியாவை நாடுகிறது

🔥 Views : 7
👁 Reading Now : 60

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நிலவி வந்த அரச தந்திர உறவில் அண்மைக் காலமாக பின்னடைவு ஏற்பட்டது. இதன் விளைவாக, இவ்விரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவிலும் கடந்த சில மாதங்களாக உரசல்கள் எழுந்தன. சீனாவிடம் இருந்து இலங்கை உரத்தை இறக்குமதி செய்தது. இதன் அடிப்படையில் உரன் ஏற்றப்பட்ட சீன சரக்குக் கப்பல் கடந்த அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வந்தது. ஆனால் அந்த உரத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கியுள்ளதாக தெரிவித்து இலங்கை விவசாய ஆய்வாளர்கள் அந்த உரத்தை நிராகரித்து விட்டனர். ஈழப் போர் முடிவுக்கு வந்த காலக்கட்டத்தில் இந்தியாவைப் புறக்கணித்து சீனாவுடன் புதிய உறவு கொண்ட இலங்கை இப்பொழுது இந்தியா பக்கம் திரும்புயுள்ளது பழைய உறவையும் புதுப்பிக்க எண்ணம் கொண்டுள்ளதாக பன்னாட்டு அரசியல் பார்வையாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles