25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

இந்திய இளைஞர்களுக்கு இலவச கனரக வாகனம் ஓட்டும் உரிமம்

இந்திய இளைஞர்களுக்கு கனரக வாகனம் ஓட்டும் உரிமத்தை இலவசமாகப் பெற்றுத்தரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புதிய மலேசிய சமூக மேம்பாட்டு -விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய துணைத் தலைவரும் ஜொகூர் மாநில தலைவருமான சதீஸ் கிருஷ்ணன் கூறினார். வேலை வாய்ப்பு பிரச்சினையையும் வருமான பாதிப்பையும் எதிர்நோக்கி உள்ள நம் சமுதாய இளைஞர்கள் உரிமம் இல்லாமல் சரக்கு லோரி போன்ற கனரக வானங்களை ஓட்டி வருகின்றனர். . அப்படிப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், வாகனம் ஓட்டும் உரிமத்தை இலவசமாக பெற்றுக் கொடுப்பதுடன் அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவதாக சதீஸ் கிருஷ்ணன் தெரிவித்தார். இஸ்கந்தார் மண்டல மேம்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற ஓட்டுநர் பயிற்சியில் முப்பது இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles