
முன்னாள் அட்டர்னி ஜெனரல் தோமி தோமஸ் அண்மையில் வெளியிட்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவுடன் ஒத்துழைக்க தோமி தோமஸ் மறுப்பது பலவித ஐயத்தை எழுப்புகிறது என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். விசாரனைத் தரப்பினருடன் இந்த முன்னாள் சட்டத்துறைத் தலைவர் ஒத்துழைக்க மறுப்பது, இவர் பொறுப்பில் இருந்த காலத்தில் நீதித் துறையில் அரசியல் தலையிடு இருந்ததற்கான சந்தேகத்தை எழுப்புகிறது. தோமி தோமஸ், தன் நினைவுகளில் இருந்து பதிவுசெய்துள்ள கருத்துக்கு பொறுப்பு ஏற்பதுடன் சிறந்த மனிதராகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் துணைப்பிரதமருமான ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
