32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

கர்நாடகம் சிவாஜி நகரில் நூற்றாண்டு தமிழ்ப்பள்ளி சீரமைப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 64

தமிழர்கள் தங்களின் கல்வியை தாய்மொழிவழியே தொடங்குவது குறித்தும் தொடர்வது பற்றியும் உலக அளவில் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு வருகிறது. ஆனால், பெற்றோர்கள் பிற மொழி பள்ளிகளின் மீதும் தனியார் பள்ளிகளின் மீதுமே அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழ் நாடு தவிர, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இந்த நிலையைக் காண முடிகிறது. கொரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்பினால், பள்ளிக் கல்வி, தற்பொழுது இல்லக் கல்வியாக உருமாறி வருகிறது. இப்படியான சூழலில் கர்நாடக மாநிலம் சிவாஜி நகரில் 100 ஆண்டுகள் பழமையான தமிழ்ப் பள்ளியைப் புதுப்பிக்க அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத் அடிக்கல் நாட்டியுள்ளார் பரம்பரியம் மிக்க இத்தமிழ்ப் பள்ளியை சீரமைப்பதில் பெருமை கொள்வதாக அர்ஷத் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles