30.1 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

மலேசியத் தமிழர் தேசியப் பேரவை புத்தாண்டு வாழ்த்து!

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதுடன் பொருளாதாரத் வளர்ச்சியை நோக்கி முன்னேறுகின்ற ஆண்டாக மலரும் தமிழ்ப் புத்தாண்டு அமையட்டும். வரும் தைத் திங்கள் முதலாம் நாள் பிறக்கும் திருவள்ளுவராண்டு 2053- தொடர்பில் அனைத்து மலேசியவாழ் தமிழர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக மலேசியத் தமிழர் தேசியப் பேரவைத் தலைவர் தமிழரசன் மணியன் தெரிவித்துள்ளார். தைப் பிறந்தால் வழிப் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு கோரணி நச்சில் பரவலால் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள இந்தச் சூழலில் புத்துணர்ச்சியையும் புது நம்பிக்கையையும் ஏந்தி இவ்வாண்டு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தர விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்போடு பொங்கலிட்டு புத்தாண்டடை வரவேற்போம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles