
பத்து எம்.பி. பிரபாகரன் உட்பட இளைஞர் பிரிவிடனரிடம் போலீஸ் விசாரனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தின் முன், அதன் தலைவர் அஸாம் பாக்கி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவினர் அமைதி மறியலில் ஈடுபட்டனர். கூட்டரசு பிரதேச பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவரும் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் உட்பட அமைதி மறியலில் ஈடுபட்டவர்களை விசாரணைக்காக காவல்துறை அழைத்துள்ளது. அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தின் அடிப்படையில் தன்னுடன் , பிகேஆர் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தீபன், செயலாளர் ஷுக்ரி ரஸாப் உட்படபிகேஆர் உறுப்பினர்கள் அனைவரையும் புத்ராஜெயா மாவட்டக் காவல்துறை விசாரணைக்காக அழைத்ததாக பிகேஆர் இளைஞர் பிரிவின் தலைவர் அக்மால் நசிர் தெரிவித்தார்.



