
ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு தலைமைப் பொறுப்பேற்று இருப்பவர் ஊழல் கறை படியாதவராக இருக்க வேண்டும் என்பது தார்மீகம்.
ஆனால், அஸாம் பாக்கி எந்தத் தரப்புக்கும் தெரிவிக்காமல் கமுக்கமாக இலட்சக் கணக்கில் பங்கு பரிவர்த்தனை செய்திருப்பதால், ஊழல் ஒழிப்பு ஆணையத் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையுடன் நேற்றைய நாடாளுமன்ற சிறப்பு அமர்வின்போது மக்கள் நீதிக் கட்சி இளைஞர் பிரிவினர் பதாகை ஏந்தி அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
அதில், நாட்டின் இருண்டு முன்னாள் துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டு அந்த ஜனநாயக முன்னெடுப்பை ஊக்குவித்தனர்.
