
கோவிட்-19இன் புதிய திரிபான ஒமிக்ரோன் பரவலைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 23-இல் தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்ட விடில் பாதை மீண்டும் திறக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே சாலை மார்க்கமாகவும் வான்வழியாகவும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் உயிர்ப்பாதுகாப்பு கருதி அதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டிருந்தது. இன்று விடிஎல் பாதை திறக்கப்பட்டாலும் பயணச் சீட்டு விற்பனையை தற்பொழுது மட்டுப்படுத்தியுள்ள சுகாதார அமைச்சு, சூழ்நிலையை அனுசரித்தும் அவதானித்தும் கட்டம் கட்டமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
