31.4 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

43,112 பேருக்கு வெ.1,000 வெள்ள நிவாரண நிதி: -சிலாங்கூர் மாநில அரசு

🔥 Views : 37
👁 Reading Now : 51

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 43,112 குடும்பங்களுக்கு இதுவரை சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த உதவித் திட்டத்திற்கு இதுவரை 4 கோடியே 32 லட்சத்து 32 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கிள்ளான் மாவட்டத்தில் மிக அதிகமாக 11,888 பேரும், பெட்டாலிங் மாவட்டத்தில் 7,241 பேரும், உலு லங்காட்டில் 7,120 பேரும், கோல லங்காட்டில் 5,279 பேரும் சிப்பாங்கில் 3,966 பேரும், கோம்பாக்கில் 898 பேரும் உலு சிலாங்கூரில் 93 பேரும் சபாக் பெர்ணமில் 39 பேரும் இந்த உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். மேலும் வெள்ளத்தில் உயிரிழந்த கிள்ளான், சிப்பாங், உலு லங்காட், கோல லங்காட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளியை வழங்குவதற்காக 120,000 வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles