31.4 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு குழந்தை பராமரிப்பு பொருள்கள்: செந்தோசா தொகுதி சேவை மையம் வழங்கியது

🔥 Views : 38
👁 Reading Now : 55

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட செந்தோசா தொகுதியைச் சேர்ந்த 60 வசதி குறைந்த குடும்பங்களுக்கு குழந்தைகளுக்கான பராமரிப்பு பொருள்கள் வழங்கப்பட்டன. கடந்த வாரம் முதல் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்கான விண்ணப்பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார். குழந்தைகளுக்கான பால் மாவு, சத்துணவு, பெம்பர்ஸ் மற்றும் பால் போத்தல் உள்ளிட்ட பொருள்கள் சம்பந்தப்பட்ட 60 குடும்பளுக்கும் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார். இந்த பொருள்களை பல்வேறு தரப்பினரிடமிருந்து தாங்கள் பெற்றதாகக் கூறிய அவர், இவற்றை பகிர்ந்தளிக்கும் பணி தொகுதி சேவை மையம் மற்றும் சுக்கா எனப்படும் சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர் அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது என்றும் பிகேஆர் கோத்தா ரஜா தொகுதி பொறுப்பாளருமான அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles