30.5 C
Kuala Lumpur
Monday, July 27, 2026

Vetri

மாமன்னர் ஐஜேஎன்-இல் சில நாட்கள் அனுமதிக்கப்பட்டிருப்பார் -அரண்மனை அறிவிப்பு

🔥 Views : 27
👁 Reading Now : 64

மாட்சிக்குரிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமட் ஷா வழக்கமான பரிசோதனையுடன் முழங்கால், முழங்கை பரிசோதனைக்காகவும் தேசிய இருதய மையம்-IJN-இல் ஒருசில நாட்களுக்கு தங்கி இருப்பார் என்று அரண்மனைக் காப்பாளர் அகமட் ஃபாடில் ஷம்சுடின் அறிவித்துள்ளார். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின்போது முழங்கால், முழங்கைகளில் ஏற்பட்ட காயம் காரணமாக் 2020 செப்டாம்பரில் சிகிச்சை மேற்கொண்ட மாமன்னர், இடையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகளின் காரணமாக தொடர் பரிசோதனைகளை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தார். இவையெல்லாவற்றையும் ஒருசேர நிறைவேற்றுவதற்காக IJN-இல் ஒருசில நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் மாமன்னர் முழு குணமடைய அனைவரும் பிரார்த்திக்கும்படி அகமட் ஃபாடில் ஷம்சுடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles