29.5 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பொது இடங்களில் கால்நடைகள்: கோல சிலாங்கூரில் 4 உரிமையாளர்களுக்கு அபராதம்!

கால்நடைகளை பொது இடங்களில் மேய விட்ட குற்றத்திற்காக நான்கு கால்நடை உரிமையாளர்களுக்கு கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அபராதம் விதித்துள்ளது. பெஸ்தாரி ஜெயா மற்றும் ஜெராம் ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அந்த நான்கு உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராண்மைக் கழகம் தெரிவித்தது. இந்த நடவடிக்கையின் போது இரு மாடுகள் மற்றும் இரு ஆடுகள் பிடிக்கப்பட்டதாகவும் பொது இடங்களில் குறிப்பாக வீடமைப்புப் பகுதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதை தடுப்பதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles