25.5 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

தடுப்பூசி நன்கொடை – பினாங்கு காவல்துறை விசாரணை

🔥 Views : 42
👁 Reading Now : 33
File Picture

கோவிட் -19 தடுப்பூசியை, பினாங்கு மாநில மக்களுக்கு வாங்குவதற்கு முன் வந்துள்ள நபர்கள்
விசாரணைக்கு உதவ, பல தரப்பினரின் சாட்சியங்களைப் பினாங்கு போலீசார் பதிவு செய்வார்கள்.

பினாங்கு காவல்துறைத் தலைவர் சஹாபுதீன் அப்துல் மனான் கூறுகையில் பினாங்கு முதலமைச்சர் அலுவலகம் உட்பட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலரிடமிருந்து இதுவரை ஆறு போலிஸ் புகார்களைப் பெற்றதாகக் கூறினார்.
கடந்த மே 19ஆம் தேதி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடினின் பினாங்கு முதல்வருக்குத் தடுப்பூசி நன்கொடை வழங்கப்பட்டது என்பது ஒரு பொய் தகவல் என்று கூறிய அறிக்கை தொடர்பாக ஒரு போலீஸ் புகாரைப் பினாங்கு போலீஸ் பெற்றது.
போலிஸ் அறிக்கையைத் தொடர்ந்து, பினாங்கு வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை, தண்டனைச் சட்டத்தின் 420 மற்றும் 511 பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles