26.4 C
Kuala Lumpur
Wednesday, August 5, 2026

Vetri

எஸ்பிஎம் தேர்வில் இலக்கியப் பாடம் எடுக்க அனுமதி மறுப்பு விவகாரம்;
கல்வி இலாகாவின் பதிலுக்காக காத்திருக்கிறேன்!

🔥 Views : 35
👁 Reading Now : 53
  இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வில் இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்க,இங்கு தென் செபராங் பிறையிலுள்ள ஜாவி தேசிய இடைநிலைப்பள்ளியின் முதல்வர் மறுப்பு தெரிவித்திருப்பது குறித்து தம் அதிருப்தி அடைந்துள்ளதாக பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கூறினார்.சம்பந்தப்பட்ட 10 இந்திய மாணவர்களின் பெற்றோர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு,இவ்விவகாரம் மாவட்ட கல்வி அலுவலகம்,மாநில கல்வி இலாகா ஆகியவற்றின் நேரடி கவனத்திற்கு சென்றுள்ளதால்,அதன் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக மாநில ஆட்சிக்குழுவின் கல்விப் பிரிவுத் தலைவருமான அவர் சொன்னார்.இந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வில்10 தமிழ் இலக்கியப் பாடத்தை எடுப்பதற்கு பள்ளியின் முதல்வர் அனுமதி மறுத்திருப்பதோடு,பல்வேறு சாக்குபோக்கினை கூறி வருவதால்,பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles