25 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

பி.கே.ஆர். வேட்பாளர்கள் அறுவரின் பெயரை அறிவித்தார் அன்வார்

🔥 Views : 26
👁 Reading Now : 56

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பி.கே.ஆர். கட்சி சார்பில் போட்டியிட இருப்பவர்களில், முதல் கட்டமாக ஆறு வேட்பாளர்களின் பெயர்களை கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ளார். அந்த வேட்பாளர்களில் முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக்கும் ஒருவர். இவர் லாயாங் லாயாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜோகூர் மாநிலத்தின் தென்பகுதியில் களமிறக்கப்பட்டுள்ள மற்ற ஐவர், ஜோகூர் கெஅடிலான் தலைவி நப்சியா காமிஸ் மஹாரான்(கெம்பாஸ் தொகுதி), ஜோகூர் கெஅடிலான் இளைஞர் பிரிவு செயலாளர் முகமது ஃபக்ருடின் முஸ்லிம்(பாசீர் ராஜா தொகுதி), ஜோகூர் மாநில கெஅடிலான் உதவித் தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் (திராம் தொகுதி), தெப்ராவ் தொகுதி கெஅடிலான் செயலாளர் சோங் சென் செம்(புக்கிட் பத்து தொகுதி) பாசீர் கூடாங் தொகுதி கெஅடிலான் பொருளாளர் டாக்டர் ஜமில் நஜ்வான் அர்பாய்ன் (லார்க்கின் தொகுதி). மற்ற வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அன்வார் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles