29.3 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

தாய்க்குத் தெரியாமல் 3 பிள்ளைகள் மதமாற்றம்

🔥 Views : 18
👁 Reading Now : 59

Loh Siew Hong என்னும் தனித்து வாழும் தாயின் 3 பிள்ளைகள், பெர்லிசில் உள்ள சமய அமைப்பின் பரமாரிப்பில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் தாய்க்குத் தெரியாமல் மதமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக பினாங்கு துணை முதலைமைச்சர் பி. ராமசாமி தெரிவித்தார். பினாங்கு பாயான் லெபாசில் அரசாங்க சார்பற்ற ஓர் இஸ்லாமிய அமைப்பை நடத்தி வரும் நசிரா நந்தகுமாரி என்பரால் அந்த மூன்று பிள்ளைகளும் மதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிரச்சனையுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்களையும், சிறுவர்களையும் அணுகி அவர்களை மதம் மாற்றும் நடவடிக்கையில் அந்தப் பெண் ஈடுபட்டு வந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை நாகேஸ்வரன் முனியான்டி, போதைப் பொருள் பழக்கம் உடையவர் என்றும் தெரிய வருவதாக ஜசெக மூத்தத் தலைவருமான அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles