34.4 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

காணாமல் போன MH370 விமானம் குறித்து புதிய தேடல்: -சீனா, ஆஸ்திரேலியாவுடன் மலேசியா கலந்தாலோசிக்கும்

🔥 Views : 25
👁 Reading Now : 69

2014 மார்ச் 08-ஆம் நாள் காணாமல்போன MH370 விமானம் குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், அந்த விமானத்தைத் தேடும் புதிய முயற்சி குறித்து சீனா, ஆஸ்திரேலிய நாடுகளுடன் மலேசியா பேச்சு வார்த்தையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் விமான பொறியியலாளர் Richard Godfrey, மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 விமானம் காணாமல் போனது குறித்த புதிய தடயங்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார். அவர் வழங்கியிருக்கும் தடயங்களைத் தற்போது ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆய்வு முடிவுக்குப் பின், புதிய தேடல் குறித்து மலேசியா முனைப்பு காட்டும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles