
தனித்து வாழும் தாய் Loh Siew Hong-இன் வயதுக் குறைந்த பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆதரவை தெரிவிப்தற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற ஆட்சேப கூட்டத்தில் கலந்துகொண்ட தனிப்பட்ட நபர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் , மற்றும் சில இஸ்லாமிய அரசு சார்பற்ற இயக்கங்கள் SOP விதிமுறையை மீறியிருக்கின்றனரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உம்மா இயக்கம், Pembela, Berjasa, putra மற்றும் Perkasa ஆகியவற்றின் பிரதிநிதிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய மதம் மாறிய இஸ்லாமிய சமய போதகர் Zamri vinoth kalimuthu நீதிமன்ற வளாகத்தில் உரையாற்றியபோது, அனைவரும் கோவிட் தொற்றுக்கான SOP விதிமுறைகளைபின்பற்றாமல் நடந்து கொண்டனர்.
