30.5 C
Kuala Lumpur
Saturday, September 19, 2026

Vetri

சீனாவின் தடுப்பூசிகள் ஏன் தாமதம்!

🔥 Views : 40
👁 Reading Now : 69

சீனாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகள் மெதுவாக வழங்கப்படுவது குறித்து பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டஅஓன்வர் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.

அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 15 மில்லியன் ( 1 கோடியே 50 லட்சம்) தடுப்பூசிகளை மலேசிய வாங்கியதாக கூறிய அன்வார் இதுவரை ஒரு பத்து லட்சம் தடுப்பூசி மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. அதாவது, மொத்த ஆர்டரில் ஏழு விழுக்காடு மட்டுமே.

தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் கம்போடியா போன்ற நாடுகள் முறையே சீனாவிலிருந்து 59, 48 மற்றும் 32 விழுக்காடு தடுப்பூசி ஆர்டர்களைப் பெற்றுள்ளன, இதில் சினோவாக் மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளும் அடங்கும்.
மலேசியாவுக்கு மட்டும் ஏன் இந்த மோசமான நிலை?

“பிரதமர் சீனாவைத் தொடர்புகொண்டு, அதனை விரைவுபடுத்த கேட்க முடியாத அளவு, அதிக வேலை பலுவில் இருக்கிறாரா? என்று அவர் கேள்வி எழுப்பினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles