25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: -மலேசிவிற்கு பொருளாதார அணுகூலம்

🔥 Views : 7
👁 Reading Now : 40

ரஷ்யா – உக்ரேன் நெருக்கடியினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருப்பது, எரிபொருள் உதவித்தொகையை வழங்க அரசாங்கத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்துயுள்ளது என்று பிரதமர் துறை பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தாபா முஹமட் தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, இறக்குமதி செய்யப்படும் கோதுமை, சோளம் போன்ற பொருட்களின் விலையை அதிகரிக்கும் என்றும் இந்தச் சூழ்நிலையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் மலேசிய அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றாலும் அதன் மதிப்பீடு இன்னும் உறுதியாகவில்லை; இருந்தாலும் இதன் ஒருபகுதி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கூடுதல் உதவித் தொகை வழங்க பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles