33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்: -உக்ரைன் விமான நிலையம் அழிப்பு

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் அதிரடிப் போரைத் தொடங்கி உள்ளது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷியப் படைகள் கைப்பற்றி உள்ளன.

மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யாவசம் சென்றுள்ளன. சிறிய நகரங்களை ரஷ்யா பிடித்திருந்தாலும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற முடியாத ரஷிய படைகள், தொடர்ந்து தீவிரம் காட்டிவருகின்றன.

ஏவுகணை வீச்சு, வான் வெளித் தாக்குதல் என அந்நகரங்களில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் மத்திய-மேற்கு மண்டல தலைநகரான வின்னிட்சியாவின் விமான நிலையத்தை ரஷியா ஏவுகணை தாக்குதல் மூலம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles