
விபத்துகள் எந்த நேரத்தில் எந்த ரூபத்தில் வரும் என்று யாரும் உறுதியிட்டு சொல்லி விட முடியாது… அப்படியொரு பரபரப்பான நெஞ்சைப் பதைக்கும் ஒரு துயரச் சம்பவம் ஈப்போ சிம்பாங் பூலாய் வட்டாரத்தில் நடந்து ள்ளது…… இங்கு ஒரு கல்லுடைப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இரு தொழிலாளர்கள் சம்பவம் நடந்த அன்று காலையில் கல்லுடைப்பு ப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போது கற்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தாக நம்பப்படுகிறது……..மேலும் இருவர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்….. நேற்று காலை 9.40 மணியளவில் சிம்பாங் பூலாய் அருகே கல்லுடைப்பு நிறுவனத்தில் நடந்த அந்த விபத்தில் சிக்கிக் கொண்ட இரு தொழிலாளர்களைத் தேடும் நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவதாக தீயணைப்பு ப் படையின் முதிர்நிலை அதிகாரி ஜோஹாரி முகமட் தெரிவித்தார்…….கற்கள் சரிந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட வர்களை மீட்பதற்கு இரண்டு நாள் பிடிக்கும் என்று அவர் கூறினார்….. இந்த க் கல் குவாரிக்கு அருகில் சிக்கியவர் களின் குடும்ப உறுப்பினர் கள் அழுது புலம்பி த் தவிக்கும் அந்த த் துயரக் காட்சி பலரது மனங்களை உருகச் செய்துள்ளது
