
வரித்தொகை செலுத்துபவர்களின் பணத்தைக் கொண்டு 1MDB கடன் செலுத்தப்படவில்லை எனும் தமது சர்ச்சையான கூற்று தொடர்பில், ஜோகூர் தேர்தலுக்குப் பிறகு தாம் மக்களவையில் விளக்கமளிக்கப் போவதாக, முன்னாள் பிரதமர் டஹ்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.1MDB கடன் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவலை மக்களவையின்போது தெரிவித்ததற்காக, அதன் தொடர்பில் நாளை விளக்கமளிக்கும்படி டத்தோ ஶ்ரீ நஜிப்பை , அவைத் தலைவர் அசார் ஹாருன் கேட்டுக் கொண்டிருந்தார். எனினும் , நாளை தாம் அவ்வாறு செய்ய இயலாது எனவும், ஜோகூர் தேர்தலுக்குப் பின் தாம் விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாகவும் டத்தோ ஶ்ரீ நஜிப் தெரிவித்திருக்கிறார்.
