26.4 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2026

Vetri

கெத்தும் இலை தாய்லாந்திற்கு ஏற்றுமதி: -கெடா அரசாங்கம் பரிந்துரை:

🔥 Views : 16
👁 Reading Now : 45

தாய்லாந்திற்கு கெத்தும் போதையிலைகளை சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்ய கெடாவிற்கு அனுமதி அளிக்கும்படி மத்திய கூட்டரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மெந்திரி பெசார் Datuk Seri Muhammad Sanusi Md Nor கூறியிருக்கிறார். கெத்தும் இலைகளைக் கொண்டு சுகாதார சேவைப் பொருளைத் தயாரித்து, வர்த்தக ரீதியாக விற்பனைச் செய்ய தாய்லாந்தில் அனுமதிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் Muhammad Sanusi இந்தப் பரிந்துரையை முன் வைத்துள்ளார். அத்துடன் நாட்டில் Ketum போதையிலை கடத்தலை முறியடிக்க அதிகாரத்துவ தரப்பினர் அதிக நேரத்தையும் பொருளையும் செலவிட வேண்டியுள்ளது. எனவே அதன் ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதன் வாயிலாக அந்த செலவைத் தவிர்க்க முடியுமெனவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles