25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சிலாங்கூர் சட்டமன்றத்தை கலைக்கும் திட்டம் இல்லை: -மந்திரி பெசார்

🔥 Views : 6
👁 Reading Now : 39

சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ Amiruddin Shari தெரிவித்துள்ளார். நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட்டாலும் சட்டமன்றத்தைக் கலைக்கும் திட்டத்தை சிலாங்கூர் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என அவர் கூறினார். சிலாங்கூர் சட்டமன்றத்தின் இப்போதைய தவணைக் காலம், அடுத்த ஆண்டு மே மாதத்தில் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக மாநில அரசைக் கலைப்பதில்லையென நம்பிக்கைக் கூட்டணி நிருவாகத்திலுள்ள மந்திரி பெசார்களுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிரித்தார். எனினும் மேன்மை தங்கிய சுல்தானின் முடிவைப் பொறுத்தே இது சாத்தியமாகும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles