25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

புரிந்துணர்வு ஒப்பந்த நீட்டிப்பு:
அன்வாருக்கு சாதகம்; ஜாஹிட்டுக்கு பாதகம்

🔥 Views : 6
👁 Reading Now : 67

நம்பிக்கைக் கூட்டணிக்கும் இஸ்மாயில் தலைமையிலான ஆட்சிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டால், அது தேசிய முன்னணிக்கு, குறிப்பாக அம்னோவுக்கு பாதகமாக அமையும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இருப்பு கொள்ளாமல் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், கட்சியில் ஹமிடியின் கை ஓங்க ஒங்க, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்
சாப்ரியின் நிலை மேலும் மேலும் இறங்கி வருவதுடன், 15-ஆவது பொதுத் தேர்தலில் தானே பிரதமர் வேட்பாளராக இருக்கும் எண்ணத்திற்கும் இடையூறு ஏற்படுகிறதே என்று கலங்கி நிற்கிறார் பிரதமர்.

மறுபுறம், ஜசெக அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் கருத்துப்படி புரிந்துணரவு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டால், இடைப்பட்ட காலத்தில் அன்வார், பெர்சத்து-மூடா-பெஜுவாங் கட்சிகளை இணைத்து ஒரு வலுவான அணியைக் கட்டமைக்க வாய்ப்பு இருப்பதுடன், இஸ்மாயிலும் இதையே விரும்புவார் என்றும் மறுபக்கம் தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்படும் எனவும் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles