
யுக்ரேனிய சிறுமி அமிலியாவின் பெற்றோர் இத்தாலிக்கு குடிபெயர்ந்துவிட்டனர்; ஆனாலும் அமிலியாவின் தாத்தாவும் பாட்டியும் யுக்ரேனிலேயே வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், யுக்ரேனில் போர் மேகம் சூழ ஆரம்பித்ததும் கவலை அடைந்த அமிலியா, அடிக்கடி தன் தாத்தா-பாட்டியுடன் பேசி வந்தாலும், இத்தாலியில் யூடியூப் நட்சத்திரமாக விளங்கும் 9 வயது அலிமியா, போர் தொடங்குவதற்கு முன்னனே ஒரு பாடலை வெளியிட்டிருந்தார்.
பெரியவர்கள் செய்யும் தவறினால், நாங்கள் சிறுவர்கள் பாதிக்கப்படலாமா? விளையாட முடியவில்லை; தோழிகளை சந்திக்க முடியவில்லை? யுக்ரேனுக்கு நீடித்த அமைதி எப்போது சொந்தமாகும்? என்றெல்லாம் கண்ணீர் சிந்தியபடி அமிலியா பாடிய பாடல் இப்போது உலகோரின் உள்ளத்தைத் தொட்டு வருகிறது. இச்சிறுமியின் தாத்தாவும் இப்போது ராணவ வீரர்!
