
2020 முதல் 2022-ஆம் ஆண்டுவரை நடைபெற்ற நான்கு மாநிலத் தேர்தல்களில் பிகேஆரின் மோசமான பின்னடைவு குறித்து, வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் தேசியப் பேரவையில் ஆலோசிக்கப்படும் என்று பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
தொடர் தோல்விகள், தற்போதைய தேர்தல் சவால்களுக்கு ஏற்ப பிகேஆரின் உத்திகள், தேர்தல் களப்பணி குறித்தெல்லாம் கட்சியின் உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்ற அவர்,
ஏப்ரல் மாதம் 8-ஆம் நாள் நடைபெற இருக்கும் கட்சித் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்தும் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் லெம்பா பந்தாய் பிகேஆர் ஆண்டுக் கூட்டத்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
