
மலேசிய பூப்பந்து சங்கத்தின் மற்றொரு வெளிநாட்டு பயிற்சியாளரான இந்தோனேசியாவின் Flandy Limpele விலகிக்கொண்டார். ஏப்ரல் 1ஆம் தேதியோடு தமது உடன்பாட்டை நீட்டிக்கொள்வதில்லை என Flandy முடிவு செய்துள்ளார்.
புதிய நிபந்தனைகளுடன் அவருடனான உடன்பாட்டை நீடிக்கச் செய்யும் முயற்சியை மலேசியப் பூபந்து சங்கம் மேற்கொண்டது. எனினும் 48வயது Flandy Limpele தமது உடன்பாட்டை நீடித்துக்கொள்வதற்கு மறுத்துவிட்டார். இதனிடையே இரண்டு ஆண்டுக் காலம் இரட்டையர் ஆட்டக்காரர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதற்காக மலேசிய பேட்மிண்டன் சங்கத்திற்கு அவர் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
