28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சிலாங்கூரில் மருத்துவமனைகள் சீரமைப்பு, புதிய கட்டுமானம்:
-சுல்தான் மகிழ்ச்சி

🔥 Views : 13
👁 Reading Now : 47

சிலாங்கூரிலுள்ள மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதற்கும் புதிதாக நிர்மாணிப்பதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிப்பாங் மற்றும் காப்பாரில் புதிய மருத்துவமனைகளை நிர்மாணிப்பதற்கும் பந்திங், காஜாங் மற்றும் கோல சிலாங்கூர் மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதற்கும் அமைச்சு எடுத்துவரும் நடவடிக்கைக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் பல தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டாலும் மாநிலத்தில் மக்கள் தொகை 70 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவதற்கு ஏதுவாக அரசாங்க மருத்துவமனைகளின் சேவை அவசியம் என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles