31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

உலக மக்களின் நன்மைக்காக பத்துமலைத் திருத்தலத்தில் சிறப்பு யாகம்

🔥 Views : 8
👁 Reading Now : 36

உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனோ நோய்த்தொற்று அழிய பத்துமலைத் திருத்தலத்தில் வரும் ஜூன் 12ஆம் தேதி சிறப்பு யாகம் நடத்தப்படுவதாக மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


ஜூன் 12ஆம் தேதி மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பத்துமலை முருகன் சன்னதி முன்புறம் இந்த சிறப்பு யாகம் நடத்தப்படுவதாக இந்த சங்கத்தின் தலைவர் முத்து தெரிவித்தார். உலகம் முழுவதும் இந்த கொடிய நோயினால் 16கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.34 லட்சம் பேர் உயிரிழந்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்த கொடிய நோயிலிருந்து உலக மக்கள் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இந்த யாகம் வளர்ப்பதற்கு அனுமதியை வழங்கி இருக்கிறார் இவ்வேளையில் அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முத்து தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles