29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மக்களின் வருமானத்தை ஈட்ட உதவுகின்றார் பி. குணசேகரன்

🔥 Views : 8
👁 Reading Now : 69

கோவிட்-19 காலத்தில் பொதுமக்கள் தங்கள் வருமானங்களை இழந்து தவித்து வருவதால் அவர்களுக்கு உதவும் வகையில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் தேங்காய் மரங்களை நடும் திட்டத்தை தொடங்கியுள்ளார். இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அவர் அண்மையில் சிரம்பான் ஜெயா வேளாண் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகரிகளைச் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் வேளாண் அலுவலகத்தைச் சேர்ந்த உதவி வேளாண் அலுவலர் சித்தி அமினா பால்கிஸ் மற்றும் வேளாண் ஆராய்ச்சி அலுவலர் அகமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிரம்பான் ஜெயா பொதுமக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட இந்த தேங்காய் மரங்கள் நடும் திட்டம் தொடர்பாக மர நாற்றுகளின் எண்ணிக்கை மற்றும் பொருத்தமான இடங்கள் ஆகியவற்றை பற்றிய விவரங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த திட்டத்தை திட்டமிட்டபடி சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும், வேளான் துறை இத்திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்கும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles