28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

ஆசிரியர்கள் பாதியில் ஓட்டம்:
புதுப்புது உத்தரவும் நிருவாகப் பணியும் அழுத்தம் தருகின்றன

🔥 Views : 11
👁 Reading Now : 70

ஆசிரியப் பணியில் இருப்பவர்கள், தங்களின் பணிக் காலம் முழுவதும் பயிற்றுச் சேவையில் நிலைத்திருக்காமல், முன் கூட்டியே பதவி விலகிச் செல்வது அண்மைய நாட்களாக பேசுபொருளாக இருக்கிறது.

கல்வி அமைச்சும் மாவட்ட கல்வி அதிகாரிகளும் புதுப்புது உத்தரவுகளை பிறப்பிப்பதாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதைக் காட்டிலும் நிருவாகப் பணி சுமையாக இருப்பதாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் ஆசிரியர்கள் இடையிலேயே தங்களின் சேவையில் இருந்து விலகுவதாகத் தெரிகிறது.

சில வேளைகளில், இரவு நேரத்தில்கூட மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து உத்தரவும் வழிகாட்டலும் வருகின்றன. மொத்தத்தில் ஆசிரியர்களை அரவணைக்காத போக்கு தொடர்வது, மாணவர்களுக்கான கல்வித் தரத்தைப் பாதிக்கும் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles