
ஒலிப்பெருக்கியின் மூலம் தொழுகைக்கான அறிவிப்பை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைரலாகியிருக்கும் தகவல், மலேசியாவில் வெளியிடப்பட்டது அல்ல. அத்தகையதொரு அறிவிப்பு இந்தியா, Pune-வில் செய்யப்பட்டது என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் Datuk Seri Abd Jalil Hassan தெரிவித்தார்.
மகராஷ்டிரா நவநிருமான சேனா கட்சியின் தலைவர் Raj Thackeray என்பவர் அந்த அறிவிப்பை செய்துள்ளார். அதனை ஏப்ரல் 17-ஆம் தேதி The New Indian Express ஊடகம் செய்தியாக வெளியிட்டிருந்தது.
அந்த செய்தியில், மே 3-ஆம் தேதிக்குள் பள்ளிவாசலில் உள்ள ஒலிப்பெருக்கிகளை கழற்றி வீசும்படியும் அந்த உத்தரவை மீறினால் பள்ளிவாசலுக்கு முன் அனுமான் பக்தி பாடல்கள் பாடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
