
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று தினங்களாக தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட ‘ஓப் உத்தாமா’ நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 1,250 வாகன ஓட்டிகளுக்கு குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.
பதினெட்டாவது ஓப் செலாமாட் இயக்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்-பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 15 முதல் 47 வயது வரையிலான 11 பேர் தடுத்து வைக்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் தலைவர் ஏசிபி ஷரிபுடின் முகமது சாலே கூறினார்.
அவர்களில் எண்மர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காகவும் இருவர் வாகனங்களில் போலி எண் பட்டையைப் பயன்படுத்தியதற்காகவும் ஒருவர் திருட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.



