27.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

நஜீப்பின் இறுதி மேல்முறையீடு:
-கூட்டரசு நீதிமன்றம் ஆகஸ்டில் செவிமடுக்கும்

🔥 Views : 30
👁 Reading Now : 31

SRC International Sdn Bhd-இல் 42 மில்லியன் வெள்ளி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடர்ப்பட்ட வழக்ககில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சிறைவாசமும் 210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நஜீப் செய்திருக்கும் கடைசி மேல் முறையீடு வரும் ஆகஸ்ட் மாதத்தில் விசாரணைக்கு வருகிறது. 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த விசாரணை, ஆகஸ்ட் 15 முதல் 19-ஆம் நாள் வரையிலும் பின்னர் 22 முதல் 26 வரையிலும் தொடர உள்ளது.

புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற இருக்கும் இந்த விசாரணை தொடர்பில் அரசுத் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை ஜூலை 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles