
கட்சித் தாவல் தடைச் சட்ட அமலாக்கத்தை முதலில் நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர்தான் 15-ஆவது பொதுத் தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஜசெக துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தி உள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி கட்சி தாவுவது, கூட்டணியை விட்டு ஒரு கட்சி அணிமாறி அரசியல் நிலைத்தன்மைக்கு ஊறு விளைவிப்பது போன்ற சிக்கல்களுக்கு முதலில் திர்வு காண வேண்டும்.
அதற்குப் பின் பொதுத் தேர்தலை நடத்தினால், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை நிலைநிறுத்த முடியும் என்றும் பூச்சோங் எம்பி-யுமான கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
