
செந்தோசா தொகுதி மக்கள் பிரதிநிதி டாக்டர் ஜி.குணராஜ் முன்னெடுப்பிலும் கிள்ளான் நகராண்மைக் கழகம், நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ஒத்துழைப்புடனும் கிள்ளானின் இலவச பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிள்ளான் தாமான் செந்தோசா, கம்போங் ஜாவா பகுதிகளுக்கான பேருந்து சேவை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது இந்தப் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் பி-40 மக்களின் போக்குவரவு வசதியைக் கருத்தில் கொண்டு ‘Smart Selangor’ பேருந்து-KLG 3C சேவையில் ஈடுபட்டுள்ளது.

ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி, பொது சந்தை உள்ளிட்ட முக்கியமான இடங்களை இலக்கு வைத்து, பண்டார் புத்ரா-ஜாலான் கெபுன் நெனாஸ்-தாமான் செந்தோசா-ஜாலான் சுங்கை ஜாத்தி-ஜாலான் கெபுன்(கம்போங் ஜாவா) ஆகிய இடங்களை இணைத்து, இந்தப் பேருந்து சேவைக்கான தடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த கிள்ளான் நகராண்மைக் கழக நகர்ப்புர திட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் Norhayati Mohd Ladzim, 36.7 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்தப் பேருந்து சேவை, 65 இடங்களில் பயணிகளை ஏற்றி-இறக்குகிறது என்றார்.



