
சிலாங்கூர் பல ஆண்டுகளாக Bon Odori விழாவினை நடத்தி வருகிறது. அதனை ஒரு சமய விழாவாக இல்லாமல் ஜப்பானிய கலாச்சார விழாவாகவே தாம் பார்ப்பதாகக் கூறியிருக்கிறார் சிலாங்கூர் மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari.
அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாமென முஸ்லீம்களுக்கு சமய விவகார அமைச்சர் வலியுறுத்தி இருக்கும் நிலையில், அந்த விவகாரத்தை தாம் சிலாங்கூர் இஸ்லாமிய சமய துறை-JAISஉடன் உறுதி செய்துக் கொள்ளப் போவதாக அவர் கூறியிருக்கின்றார்.
அந்த ஜப்பானிய விழாவில் சமய அம்சங்கள் இருந்தால் அதற்கு தமது தரப்பு கட்டுப்படும். இல்லையென்றால் என்ன செய்வது என Amirudin Shari கேள்வி எழுப்பினார்.



