34 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

போர் முனையில் ஜப்பானியரை மிரளவைத்தவர் அஞ்சலை
ஐஎன்ஏ பயிற்றுனர் டான்ஸ்ரீ சோமசுந்தரம் நினைவுகூர்ந்தார்

🔥 Views : 19
👁 Reading Now : 34

2-ஆம் உலகப் போரில் பிரிட்டிஷ் படையினருக்கு எதிராகப் ஜப்பான் இராணுவத்துடன் இணைந்து போராடிய நேதாஜியின் ஐஎன்ஏ படையில் இணைந்து களமாடிய பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படை, உலகில் முதல் முதலில் உருவான பெண் இராணுவப் படையாகும்.

நாற்காலியில் அமர்ந்திருப்பவர் டான்ஸ்ரீ கே ஆர் சோமசுந்தரம்

இதில் இணைந்து போராடிய விரமங்கை அஞ்சலை அவர்களைப் பற்றி நேரில் அறிமுகம் இல்லாவிட்டாலும், அவரின் வீரம் ஜப்பானிய கமாண்டோ அதிகாரிகளே பாராட்டும் அளவுக்கு இருந்ததாக பேசப்பட்ட தகவலை, ஐஎன்ஏ படையில் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்தவரும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவருமான டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அவர்கள் நினைவுகூர்ந்தார்.

நேற்று இயற்கை எய்திய அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், தன்னுடைய தாயாரைப் போலவே நூற்றாண்டை எட்டி வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் (இடது)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles