33 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

ஸ்கூடாய் தாமான் யுனிவர்சிட்டியில்
தமிழ்ப் பள்ளி வேண்டும்

ஜோகூர், ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டியில் ஒரு தமிழ்ப் பள்ளி உருவாக்கப்பட வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளும் பொது இயக்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன.

இதன் தொடர்பில், மலேசிய முனேற்றக் கட்சி, மலேசிய சோசலிசக் கட்சி, செம்பருத்தி நண்பர்கள் இயக்கம், ஹிண்ட்ராஃப், பண்டார் பாரு கங்காய் பூலாய் இந்தியர் சமூக-பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம் ஆகிய இயக்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய நடவடிக்கைக் குழுவின் 2-வது கூட்டம் 2022 ஜூன் 6-ஆம் நாள் கங்கார் பூலாயில் நடைபெற்றது.

இதேப் பகுதியில், 1956 முதல் இயங்கிய Buan Heng தோட்டத் தமிழ்ப்பள்ளி, மேம்பாட்டுத் திட்டங்களின் விளைவாக இடையில் அகற்றப்பட்டது. தற்பொழுது, தாமான் யுனிவர்சிட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் 3,300 இந்தியர்கள் வசிப்பதால், இங்கு ஒரு தமிழ்ப் பள்ளி உருவாக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles