33 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

புக்கிட் கியாரா சமூக நல மேம்பட்டு இயக்கத்தின்
ஏற்பாட்டில் ‘செல்லக் கிளிகளாம்’ கலை நிகழ்ச்சி:

டமன்சாரா புக்கிட் கியாரா சமூக நல மேம்பட்டு இயக்கத்தின் ‘செல்லக் கிளிகளாம்’ கலைநிகழ்ச்சி டமன்சாரா உத்தாமா, SS 21/9 செர்பகுணா மண்டபத்தில் ஜூலை மாதம் 9-ஆம் நாள் நடைபெறவுள்ளது.

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே.இராமலிங்கம், மஇகா புத்ரா ஜெயா தொகுதித் தலைவர் பன்னீர் செல்வம், புக்கிட் கியாரா தொழிலதிபர் டாக்டர் மனோ பரமசிவம் ஆகியோரின் ஆதரவில் இந்த நிகழ்ச்சி படைக்கப்பட இருக்கிறது.

4 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதி, உடற்பேறு குறைந்த மூவருக்கு சக்கர நாற்காளி, பி-40 குடும்ப மாணவர்களுக்கு கல்வி நிதி, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ நிதி வழங்குவது ஆகிய பொது நோக்கங்களை உள்ளடக்கி மிகப்பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி படைக்கப்பட இருக்கிறது என்று இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முத்தழகன் தெரிவித்துள்ளார்.

டத்தோ வி.ராஜு ஆலோசகராக செயல்படும் இந்த இலவச நிகழ்ச்சிக்கு
அனைவரும் ஆதரவு அளிக்கும்படி ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் டாக்டர் கே. எஸ். பாஸ்கரன் கேட்டுக் கொள்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles