
2021 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்கள் ஜூன் 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் தங்களின் தேர்வு முடிவை பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் டாக்டர் Mohd Radzi Mohd Jidin வெளிட்ட காணொளியில் மூன்று அணுகுமுறை வாயிலாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெற முடியும் என கூறினார்.
முதலாவதாக ஜூன் 16ஆம் தேதி நேரடியாக பள்ளிக்கு சென்று காலை 10 மணிக்கு மேல் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவதாக இணையம் வாயிலாகவும் மூன்றாவதாக குறுந்தகவல் சேவை வாயிலாகவும் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் Mohd Radzi தெரிவித்தார்.
