
பெர்சத்து கட்சியிடமிருந்து நெருக்குதல் வந்துள்ளபோதிலும் தான் வகிக்கும் தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சர் பதவி குறித்து, பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob-இன் முடிவுக்கே விட்டுவிட்டதாக அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான Zuraidah Kamaruddin தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமரிடம் இருக்கிறது. தான் பார்ட்டி பங்சா மலேசியா-பி.பி.எம். கட்சியில் இணையவிருப்பதால் பெர்சத்து கட்சியிலிருந்து விலகுவதாக மே 26ஆம் தேதி சுரைடா அறிவித்தார்.
பெர்சத்துவின் உறுப்பினர் நிலையிலிருந்து சுரைடா நீக்கப்பட்டு விட்டதால் அவர் வகித்துவந்த அமைச்சர் பதவி கட்சியின் மற்றொரு உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என பெர்சத்துவின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கோரிக்கை விடுத்திருந்தார்.



