
மீன் பற்றாக்குறைப் பிரச்சனைக்கு அடுத்த மாதம் தீர்வு பிறக்கும் என்பதோடு மீன் விலையும் குறையும் என தேசிய மீனவர் சங்கத் தலைவர் அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக 3லட்சம் டன் மீன்களை மட்டுமே மீனவர்கள் கடலில் பிடித்துள்ளனர். இம்மாதம் இறுதிக்குப் பின் சுமார் ஆறு லட்சம் டன் வரை மீனவர்கள் மீன் பிடிப்பார்கள் என அவர் கூறினார்.
வானிலை உறுதியற்ற நிலையில் இருப்பதோடு, போதுமான வெளிநாட்டு தொழிலாளர்கள் இல்லாதது மற்றும் சி-2 டீசல் மீன் பிடி படகுகளின் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறைந்துவிட்டது. மீன் பற்றாக்குறைவுக்கு இதுவும் ஒரு காரணம் என அப்துல் ஹமிட் சுட்டிக்காட்டினார்.



