
சந்தையில் சில மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை நிலவுவதை சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் மருந்து நிறுவன சங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பற்றாக்குறைக்கு உள்ளான மருந்துகளின் பட்டியலை அறிந்துகொள்வதற்காக அந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசிய மருந்து தொழில் சங்கம், மலேசிய மருந்துகள் விநியோக சங்கம் ஆகியவையும் மருந்து பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக் கொண்டுள்ளன. நோய் எதிர்ப்பு மருந்து, குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் இருமல் மருந்து ஆகியவற்றின் விநியோகத்தில் பற்றாக்குறை இருந்து வருவதாக கைரி கூறினார்.



