29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

டாக்டர் மகாதீருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டத்தோஸ்ரீ நஜீப்பின் பெருந்தன்மைக்கு வலைத்தளவாசிகள் பாராட்டு

🔥 Views : 5
👁 Reading Now : 67

தமது 97-ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தது குறித்து வலைத்தளவாசிகள் ஆச்சரியம் அடைந்தனர். ” பிறந்த நாள் வாழ்த்துக்கள். வளமும் நல்ல உடல் நலத்தையும் துன் மகாதீர் பெறவேண்டும்” என தாம் நம்புவதாக முகநூல் மூலமாக அவருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் நஜீப் குறிப்பிட்டிருந்தார். அவர் பகிர்வு செய்திருந்த அந்த வாழ்த்து செய்திக்கு ஒரு மணி நேரத்திற்குள் 21,000 பேர் ” லைக்” தெரிவித்திருந்தனர். சுமார் 1,000 பேர் தங்களது கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். தம்மைப் பற்றி மிகவும் மோசமாக குறைகூறிவந்தாலும் டாக்டர் மகாதீருக்கு வாழ்த்து தெரிவித்த நஜீப்பின் பெருமையை வலைத்தளவாசிகள் பாராட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles